தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை தரம்பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது பழனி செட்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகளில் 200க்கும் அதிகமான தெருக்களின் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்

இதே போல் உணவகங்களில் தேநீர் கடைகள் என் பல்வேறு வணிக நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் குடியிருப்புகள் வணிக நிறுவனங்களில் சேகாரமாகும் ஈரம் உலர் சானிட்டரி கழிவுகள் மின் கலம் பேட்டரி உள்ளிட்ட மின்சாதன கழிவுகளை திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் 4 வகையாக தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் இதன் மூலம் காற்று மாசு குறையும் பொதுமக்கள் நோய் பரவலை தவிர்க்கலாம்

மக்கும் குப்பைகளை உரமாக மாற்றலாம் என்று பழனி செட்டிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் யோக ஸ்ரீ பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயக்குமார் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் தெருத் தெருவாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது இது போன்ற எங்கள் வீடுகளில் சேதாரம் ஆகும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்கையாக செய்து காட்டி குப்பைகளால் ஏற்படும் நோய்கள் அவர்கள் கூறியபடி குப்பையை தெருவில் கொட்டாமல் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதால் ஏற்படும் நன்மைகளை புரிந்து கொண்டோம் இவ்வாறு அவர்கள் கூறினார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *