அரியலூர் மாவட்டம் லிங்கதடிமேடு கயர்லாபாத் வள்ளலார் கல்வி நிலைய நிறுவனர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அய்யா விஸ்வநாதன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியும் மற்றும் புதிய குழந்தைகள் இல்ல அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது சித்தசக்தி அருள்ஜோதி வள்ளலார் கல்வி நிலைய செயலாளர் முனைவர் கொ வி புகழேந்தி அனைவரையும் வரவேற்று பேசினார்
கல்வி நிலைய தலைவர் சீனி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார் உலக தமிழ்சிகரம் செயலாளர் முனைவர் பொன்னுசாமி செயற்குழு உறுப்பினர் முனைவர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் அய்யா விஸ்வநாதன் சிலைக்கு மாலை அணிவித்து பல்வேறு போட்டிகள் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சட்டமன்ற உறுப்பினர் தாமரை ராஜேந்திரன் சிறப்பு உரையாற்றினார்
புதிய குழந்தைகள் இல்லத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்து ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.வைத்தி அவர்கள் சிறப்புரையாற்றினார். அரியலூர் மாவட்ட வன்னியர் கல்வி வளர்ச்சி கழக பொதுச்செயலாளர் செந்துறை கொளஞ்சிநாதன் நிறுவனர் நினைவு சிறப்பு உரையாற்றினார் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு அமைப்பு செயலாளர் அரியலூர் நல்லப்பன் வாழ்துரை வழங்கினார் அவர் பேசுகையில் அரியலூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அரசு கல்லூரி அரியலூர் மாவட்டத்திற்கு எம்எல்ஏக்கள் கொண்டுவந்துள்ளனர்
இதே போல் சட்டக்கல்லூரி அரியலூர் மாவட்டத்திற்க்கு எம்எல்ஏக்கள் பெரும் முயற்சி எடுத்து கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைத்தார் செயற்குழு உறுப்பினர் செல்வராணி நிறுவனர் நினைவு பரிசு வழங்கினார் தலைமை ஆசிரியர் நல் ஆசிரியர் பெ சௌந்தரராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார் திருவள்ளுவர் இல்ல குழந்தைகள் இசை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது