தருமபுரி:

அரூரில் மூன்றாம் ஆண்டு ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது

தர்மபுரி மாவட்டம், அரூர் நகரில் மூன்றாம் ஆண்டு ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி ஸ்ரீ விஸ்வகர்மா சுவாமி திருவீதி உலா, நான்கு ரோடு மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து தொடங்கி, அரூர் ரவுண்டானா, பேருந்து நிலையம், தாஸ் திரையரங்கம் வழியாக பேரியார் நகர் சென்று பொன் கற்பகம் திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது.

விழாவில் விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், குடும்பத்தினர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மங்கள வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற திருவீதி உலா பக்தர்களிடையே மகிழ்ச்சியையும் ஆன்மிக உணர்வையும் ஏற்படுத்தியது.

வி. மணி கிளாஸ் மற்றும் ஆர். தருண்குமார் ஆகியோரது தலைமையில் விழா ஏற்பாடுகள் நடைபெற்றன. அவர்களுடன் பிரபு, முருகன், சந்திரன், இளங்கோ, ரஜினி, முருகன், இளையராஜா, தங்கராஜ், ஆஸ்கார் மோகன், லிட்டர் உள்ளிட்டோர் இணைந்து விழா ஏற்பாடுகளை செய்தனர்.

விழாவின் முக்கிய நோக்கமாக விஸ்வகர்மா ஜெயந்தி அன்று அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று விஸ்வகர்மா சமுதாய மக்களின் ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் அடுத்த தலைமுறையினருக்கு சமுதாயத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை எடுத்துச் செல்வது வலியுறுத்தப்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விழாக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *