ஈரோடு மாவட்ட அனைத்து செய்தியாளர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் இந்த போர்ட்டத்தில் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், செய்தியாளர்களுக்கு வழங்கப்படும் பேருந்து பயண அட்டை குறித்து நடத்துனர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று வலியுறுத்ப்பட்டது.

செய்தியாளர்களின் கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் வரும் திங்கட்கிழமை 12.10.2026 முதல் கோரிக்கை நிறைவேறும் வரை ஈரோடு செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *