எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பெட்ரோல் குண்டு பாட்டில்களை அள்ளிச் சென்ற போலீசாரால் பொதுமக்கள் அதிர்ச்சி.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதி பிரதான சாலையில் அடுத்தடுத்து வீசப்பட்ட நான்கு பெட்ரோல் குண்டுகள். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் பெட்ரோல் குண்டுகளை வீசிய மர்ம நபர் பொதுமக்கள் வி.ட்டிய நிலையில் தப்பி ஓடி தலைமறைவு.
தகவல் அறிந்து வந்த சீர்காழி போலீசார் அப்பகுதியில் உள்ள கடைகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஹார்ட் டிஸ்க்களுடன் பறிமுதல் செய்ததுடன், சாலையில் பெட்ரோல் குண்டு வீச்சில் சிதறி கிடந்த பாட்டில்கள் மற்றும் கண்ணாடி துகள்களையும் முழுமையாக கைப்பற்றி சென்றனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் சாலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தால் அப்பகுதி வணிகர்கள் உடனடியாக தங்களது கடைகளை அடைத்து சென்றனர் இதனால் சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறுச்சோடியது. எனவே பெட்ரோல் குண்டு வீசிய நபர்களைக் உடனடியாக கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.