கரூர்செய்தியாளர் மரியான் பாபு


கரூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸின் 58 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட பாமக(மே) மாவட்ட செயலாளர் புகலூர் சுரேஷ் தலைமையில் கரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இலவச மருத்துவ முகாம் நிகழ்வு நடைபெற்றது இதில் 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு தங்கள் மருத்துவ குறைகளை நிவர்த்தி செய்தனர்.

பின்னர் காமாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள தனியார் இரத்த வங்கியில் இரத்ததான முகாம் நடைபெற்றது.இந்நிழ்ச்சியில் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் பிரபாகரன், மாநகர செயலாளர் ராக்கி முருகேசன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலையப்பசாமி,மாநகர இளைஞரணி செயலாளர் மாதேஷ் குமார், மாநகர பொருளாளர் நிர்மலா மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *