S. செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்

புதுச்சேரி காரைக்கால் மாவட்டம், திருபட்டினத்தில் உள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று கோவிலின் மேல்தளத்தில் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென முட்டுமரம் சரிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மேல்தளத்தில் போடப்பட்டிருந்த கான்கிரீட் மற்றும் இரும்புக் கம்பிகள் கீழே சரிந்து விழுந்தன. இந்த விபத்தின்போது அப்பகுதியில் இருந்தவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

விபத்துக்கான காரணம் குறித்து திருபட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழமை வாய்ந்த கோவில் புனரமைப்பு பணியின்போது கான்கிரீட் தளம் சரிந்து விழுந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *