கரூர் செய்தியாளர் மரியான் பாபு


கரூர் மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் தோழர் களம் சார்பில் தந்தை பெரியாரின்148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சமூக நீதி சமத்துவத்திற்கான பெரியார் நடை( மினி மாரத்தான்)போட்டி கரூர் லைட் ஹவுஸ் கார்னர் தந்தை பெரியார் சிலை முன்பு நடைபெற்றது.

கரூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜெகநாதன் வரவேற்பு உரையாற்றினார். பெரியார் நடை மினி மாரத்தான் போட்டியை தோழர் களம் நிறுவன தலைவர் தி.க. சண்முகம் தொடங்கி வைத்தார்.

கரூர் லைட் ஹவுஸ்  கார்னர் பெரியார் சிலை முன்பு புறப்பட்ட மினி மாரத்தான் உழவர் சந்தை,கரூர் பழைய பஸ் நிலையம் ரவுண்டானா,ஜவகர் பஜார்,பழைய திண்டுக்கல் ரோடு வழியாக லைட் ஹவுஸ் கார்னர் வந்தடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கேடயம், பாராட்டுச் சான்றிதழ், பதக்கம்,பரிசுகளை ஏ.எஸ்.அபுல் ஹாசன் தலைவர் ஏ.ஆர்.எஸ் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனர், தோழர் களம் நிறுவனத் தலைவர் தி.க சண்முகம் ஆகியோர் வழங்கினர்.உடன் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இரா. குடியரசு,மாவட்ட விடுதலை வாசகர் வட்ட தலைவர் ம. கண்ணதாசன், மாவட்ட காப்பாளர் வே.ராஜு, பொதுக்குழு உறுப்பினர்கள் சே. அன்பு,கட்டளை வைரவன், மாவட்டச் செயலாளர் காளிமுத்து, சா. மோகன் மாநில தொழிலாளர் அணி செயலாளர்,  மாவட்ட துணைச் செயலாளர் அலெக்ஸ், நகர செயலாளர் ராஜா, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் பெருமாள், செயலாளர் வடிவேல், கரூர் ஒன்றிய தலைவர் பழனிச்சாமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராஜாமணி, மற்றும் தோழர் களம் அமைப்பின் சார்பில் தமிழன் சு.கவின் குமார் தலைமை நிலைய செயலாளர், இரா ராஜகோபால் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *