திருவள்ளூர் மாவட்டம், மேல்நல்லாத்தூர்:

ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் சார்பில், திருவள்ளூர் மாவட்டத் தலைவர் திரு. ஏழுமலை அவர்கள் தலைமையில், மணவாளநகர் கிளைத் தலைவர் திரு. ரமேஷ் மற்றும் மணவாளநகர் கிளைச் செயலாளர் திரு. சந்தோஷ் ஆகியோர் முன்னிலையில், மேல்நல்லாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அன்பாலயா சிறப்புப் பள்ளியில் சிறப்பான சமூக சேவை மற்றும் நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மணவாளநகர் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து, பள்ளியில் பயிலும் 80 குழந்தைகளுக்குக் காலை உணவு மற்றும் மதிய உணவு வழங்கினர். மேலும் அப்பள்ளிக் குழந்தைகளுக்குத் தேவையான உபகரணங்களும் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்பட்டன.

குழந்தைகளின் நலனையும், அவர்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு நடைபெற்ற இச்சேவை நிகழ்ச்சி ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் மனிதநேயத்தையும் சமூகப் பொறுப்புனர்வையும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்தது.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் திரு. அரவிந்தன், தேசியப் பொதுச் செயலாளர் திரு. நந்தகுமார், தேசியக் கொள்கை பரப்புச் செயலாளர் திரு. புகழேந்தி, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள், மணவாளநகர் கிளை நிர்வாகிகள் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *