தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் கும்பகோணம் தாஜ் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கூட்டத்துக்கு த.மு.மு.க.தஞ்சை வடக்கு மாவட்டத் பொறுப்பு குழு தலைவர் ரஹ்மத் அலி தலைமை தாங்கினார்.மாவட்ட பொறுப்பு
குழு உறுப்பினர்கள்,தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராஜ் முகமது, ஹிபாயத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தமுமுக .மாநிலபொதுச் செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனி,மனித
நேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தஞ்சை பதுஷா, தேர்தல் அதிகாரி நூர்தீன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.

அப்போது பேசியதாவது:-

இஸ்லாமியக் குடியரசுத் தலைவர் கலீபா உமரின் ஆட்சி முறை போன்றதொரு ஆட்சி இந்தியாவில் மலர வேண்டும்.இந்தியாவிற்கான ஒரு அரசாங்கம், ஒரு ஆட்சி வரவேண்டும் என்று சொன்னால், அது கலீபா உமரின் ஆட்சியைப் போல் ஒரு ஆட்சி இருக்க வேண்டும் என மகாத்மா காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா கதாநாயகர்கள் அல்ல அவர் உண்மையான நாயகர்கள்கலீபா உமர் கடந்து வந்த வாழ்வியலின் வழிமுறையும், நம்முடைய இதயத்திலே இருந்தால்,சினிமாக்காரர்களுக்காக ஆள்வதற்கு நாம் அடித்துக் கொண்டு ஓட மாட்டோம்.உண்மையான நாயகர்களை எல்லாம் நாம் ஒளித்து வைத்து விட்டு, திரைப்பிம்பங்களிலே ஆடிக் கொண்டிருக்கிற போலிக் கதாநாயகர்களுக்குப் பின்னால் ஓடுகிறார்கள்.இந்த சமுதாயத்தின் இளையோர்கள் கருத்தில் நாம் என்ன செய்தோம்? நாம் நம்முடைய கடமையைச் செய்திருக்கிறோமா?

கலீபா உமர் ஆட்சி முறையே இந்தியாவில் மலர வேண்டும். என இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் செய்திருந்தனர். நகர தலைவர் ரசீன் முஹம்மது நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *