.


தூத்துக்குடி மாநகரில் அனுமதி இல்லாமல் நிலத்தடி நீர்விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர் அதன் அடிப்படையில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா உத்தரவின் பெயரில் மேற்கு மண்டல உதவி ஆணையர் மதனகோபால் அதிரடியாக 2 மணி நேரத்தில் மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு எண் 34 ராஜூ நகர் பகுதியில் வி அக்குவா என்ற பெயரில் சட்டத்துக்கு புறம்பாக குடிநீர் சுத்தரிப்பு நிலையம் நடத்தி வருவதாலும் அரசு உணவு பாதுகாப்பு துறையில் முறையாக அனுமதி பெறாமல் குடியிருப்பு பயன்பாட்டில் உள்ள இடத்தினை வணிக நோக்கில் பயன்படுத்துவதாலும் மேலும் மேற்படி தொழில் புரிவது சம்பந்தமாக மாநகராட்சியில் சுகாதாரப் பிரிவில் முறையான அனுமதி பெறாமல் செய்தது தெரிய வந்தது மேலும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்ததின் அடிப்படையில் இன்று 13 ஆம் தேதி மாநகராட்சி மேற்கு மண்டல உதவியாளர் மதனகோபால் மேற்படி நிறுவனத்தை சீல் வைப்பதற்காக உத்தரவிடப்பட்டு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்

பொதுமக்கள் புகார் தெரிவித்த 2 மணி நேரத்தில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது . அதுபோல தூத்துக்குடி மாநகரில் 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நிலத்தடி நீர் எடுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது இதில் எந்தெந்த நிறுவனம் மாநகராட்சியில் அனுமதி பெறப்பட்டுள்ளது

என்ற விபரத்தையும் மாநகராட்சி வெளியிட வேண்டும் அதுபோல அனுமதி இல்லாமல் நிலத்தடி நீர் எடுத்து விற்பனை செய்யும் மற்ற நிறுவனங்கள் மீது இன்னும் மாநகராட்சி நிர்வாகம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது அதுபோல குடியிருப்பு பகுதியில் உள்ளதாக கூறப்படுகிறது

இன்னும் நிறைய நிலத்தடி நீர் எடுக்கும் நிறுவனங்கள் குடியிருப்பு பகுதியில் தான் செயல்பட்டு வருகிறது அதன் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுபோல நிலத்தடி நீர் மட்டும்தான் எடுக்கப்படுகிறதா இல்லை மாநகராட்சி குடிநீர் எடுக்கப்படுகிறதா என்பதையும் மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும் ஆகையால் மாநகராட்சி நிர்வாகம் எந்தவிதமான பாரபட்சமில்லாமல் தூத்துக்குடி மாநகரில் நிலத்தடி நீர் எடுப்பதற்கு அனுமதி இல்லாமல் செயல்படும் அனைத்து நிறுவனங்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கோரிக்கையாகவே உள்ளது

இந்த விஷயத்தில் பாரபட்சமின்றி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நிலத்தடி நிர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் காலங்களில் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது ஆகையால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் மாநகரில் அனுமதி இல்லாமல் நிலத்தடி நீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *