தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சியில் நகராட்சிக்கு உட்பட்ட திட்ட சாலையில் இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் UIDAI நேரடியாக அமைக்கப்பட்டுள்ள புதிய ஆதார் சேவை மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் வ. சிவ கிருஷ்ணமூர்த்தி செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பார்வையிட்டார்
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தை UIDAI நேரடியாக இயக்கப்படும் ஆதார் சேவை மையம் Adhaar seva Kendra ASK பாதுகாப்பான தரை நிலைப்படுத்தப்பட்ட மற்றும் உயர்தர ஆதார் சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த ஆதார் சேவை மையங்கள் UIDAIயின் நேரடி கண்காணிப்பில் செயல்படுகின்றன
இந்த ஆதார் சேவை மையத்தின் மூலம் பொதுமக்கள் ஆதார் பதிவு மக்கள் தொகை விவரம் Demographic மற்றும் உயிர் வழி Biometric புதுப்பித்தல் பிழைத்திருத்தம் மற்றும் குறைதீர் சேவைகள் உள்ளிட்ட அனைத்து ஆதார் சேவைகளையும் ஒரே இடத்தில் அனைத்து ஆதார் சேவைகளையும் பெற முடியும் மேலும் இந்த ஆதார் சேவை மையத்தில் ASK மேலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்
இவர் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி அதன் மீது விரைவாக தீர்வுகள் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். இந்த ஆதார் சேவை மையம் திறக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய திறன்மிக்க மற்றும் குடிமக்கள் மையப்படுத்தப்பட்ட ஆதார் சேவைகளை வழங்குவதற்கான UIDAI யின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.
ஆதார் சேவை மையங்கள் அரசு பொது விடுமுறை நாட்களைத் தவிர வாரத்தின் ஏழு நாட்களும் செயல்படுகின்றன இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு வசதியான எந்த நாளிலும் ஆதார் சேவைகளை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
எனவே ஆதார் அட்டை தொடர்பான சேவைகளை பெற விரும்பும் பொதுமக்கள் இந்த மையத்தை அணுகி தங்களின் நிறைவேற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்வில் கிளை மேலாளர் செல்வராஜ் துணை பிரிவு அலுவலர் பிரகாஷ் பாபு மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்