புதுச்சேரி

டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்திய நுகர்வோர் சம்மேளனத்தின் (Consumer Confederation of India – CCI) தேசிய இணைச் செயலாளராக, புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரியைச் சேர்ந்த நுகர்வோர் செயற்பாட்டாளர் S. சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 16.10.2026 அன்று வெளியிடப்பட்டது.

இந்திய நுகர்வோர் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் டாக்டர் அனந்த் சர்மா மற்றும் செல்வராஜ் ஆகியோரின் ஆதரவு, ஊக்கம் மற்றும் வழிகாட்டுதலும், FEDCOT INDIA அமைப்பின் மாநிலத் தலைவர், வழக்கறிஞர் S. திருமுருகன் அவர்களின் வழிகாட்டுதலும் இந்தப் பொறுப்பு கிடைப்பதற்குப் பக்கபலமாக அமைந்தன.

சிவக்குமார், FEDCOT INDIA Consumer Movement (Puducherry State) – நுகர்வோர் சங்கங்கள் கூட்டமைப்பு, புதுச்சேரி மாநிலம் அமைப்பின் மாநிலச் செயலாளராகவும், BIS Trainer ஆகவும் பணியாற்றி வருகிறார். மேலும், Civil Defence, Aapda Mitra மற்றும் FSSAI – Eat Right India குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்து வருகிறார்.

நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு, தரமான பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த விழிப்புணர்வு, உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறார்.

தேசிய அளவில் கிடைத்துள்ள இந்தப் பொறுப்பின் மூலம் நுகர்வோர் நலப்பணிகளை மேலும் வலுப்படுத்தவும், புதுச்சேரி மாநில நுகர்வோர் இயக்கங்களை ஒருங்கிணைத்துச் செயல்படவும் உறுதிபூண்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *