தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளான்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் கல்லூரி நிர்வாகம் மற்றும் மகளிர் மையம் சார்பில் நவராத்திரி விழா 6 ஆவது நாள் ஆன்மீகமும் கலாச்சாரமும் நிறைந்த வகையில் சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரி மகளிர் மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ் விஜயலட்சுமி தலைமையில் கல்லூரி ஆலோசனை குழு உறுப்பினர்கள் முன்னிலையில் கொலு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளை சிறப்பாக நடத்தினார்கள்.

இந்த கல்லூரியில் நடைபெற்ற நவராத்திரி விழா மாணவ மாணவியர்களுக்கு பாரம்பரியம் மற்றும் ஆன்மீக அறிவை வழங்குவதோடு அவர்களின் ஒத்துழைப்பு பொறுப்புணர்வு ஒருங்கிணைப்பு திறன்களை மேம்படுத்துவதற்கு உதவியதாக இந்த விழாவில் பங்கேற்ற கல்லூரி மாணவ மாணவிகள் பெருமிதத்துடன் கூறினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் கெளரவ தலைவர் எஸ் வி சுப்பிரமணியன் கல்லூரியின் தலைவர் எஸ் ராமநாதன் உப தலைவர் எஸ் ஞானவேல் கல்லூரியின் செயலாளர் மற்றும் தொடர்பாளர் ஆர் ஆர் புருஷோத்தமன் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் சிவக்குமார் உள்பட கல்லூரி பேராசிரியர்கள் பேராசிரியைகள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *