வணிகர் தினத்தையொட்டி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கோவை:

இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், தனது சொத்துக்களை விற்று சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடினார். அவரது தியாகத்தையும் தேசப்பற்றையும் போற்றும் வகையில், அவர் சுதேசிக் கப்பல் இயக்கத்தைத் தொடங்கிய நாளை இந்து வியாபாரிகள் சங்கம் வணிகர் தினமாகக் கொண்டாடி வருகிறது.

இதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, கோவை வ.உ.சிதம்பரம் பூங்காவில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இந்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு இந்து வியாபாரிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முருகேஷ் தலைமை வகித்தார். தோட்டச் செயலாளர் உருவை பாலன், மாவட்டச் செயலாளர்கள் ஆனந்த், ராஜன், கிருஷ்ணகுமார், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சதீஷ், மாநில செயற்குழு உறுப்பினர் தசரதன், மாவட்டச் செய்தித் தொடர்பாளர் சி. தனபால், கோவை கோட்டச் செயலாளர் பாபா கிருஷ்ணன், த. குணா, மாவட்டச் செயலாளர்கள் ஆறுச்சாமி, மகேஸ்வரன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *