கும்பகோணம்: தஞ்சையின் கலாச்சார நகரமான கும்பகோணத்தில், குடந்தை மகாமகம் லயன்ஸ் சங்கம் சார்பில் மாவட்ட நவராத்திரி விழா ஏ.ஆர்.ஆர். லைலா மஹாலில் வெள்ளிக்கிழமை மாலை விண்ணை முட்டும் ஆரவாரத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.

விழாவிற்கு வருகை தந்த மாவட்ட, துணை ஆளுநர்களுக்கு பாரம்பரிய கும்ப மரியாதை செலுத்தி, தலையில் மகுடம் சூட்டி வரவேற்ற காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது.மாவட்ட நவராத்திரி விழாத் தலைவர் லயன் பூரண்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆளுநர் PMJF Lion விஜயலட்சுமி சண்முகவேல் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். அவரை நவராத்திரி மாவட்ட தலைவர் MJF Lion R.பூரண்குமார் சிறப்பாக வரவேற்றார்.

மேடையில் முதல் துணை ஆளுநர் PMJ Lion ஸ்டாலின், இரண்டாம் துணை ஆளுநர் PMJF Lion K.ராஜன், பி.எம்.ஜே.எப். லயன் எழிலரசி ரவி, Mission 1.5 தலைவர் PMJF Lion Er. K.ராமதுரை, மாவட்ட தலைவர் செந்தில்குமரன், முதன்மை கொடையாளர் PMJF லயம்பி. கோபால்சாமி
மண்டல செயலாளர் MJF Lion C.சீனிவாசன்வட்டாரத் தலைவர் Lion C.அன்புச்செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கலைஞர்கள் வழங்கிய கிருஷ்ணன் – கோதை நடனம் அமைந்தது. தலையில் தண்ணீர் பானையுடன் கோதை வேடமிட்ட கலைஞர் சுழன்று சுழன்று ஆடிய ஆட்டம், அரங்கத்தையே மெய்சிலிர்க்க வைத்தது!குடந்தை மகாமகம் சங்க தலைவர் MJF Lion S. B.கணேஷ்குமார், செயலாளர் Lion S. V.ராஜு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட லயன்ஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். முழு நிகழ்ச்சியையும் MJF Lion மேஜர் K. பழனிவேலு கச்சிதமாக வடிவமைத்து வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *