கோவை கள்ளிப்பாளையத்தில் அமைந்துள்ள சுகுணா சர்வதேசப் பள்ளியின் ஆண்டு விழா, காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா அரங்கில் நடைபெற்றது.
பள்ளியின் நிர்வாக அறங்காவலர் இலட்சுமிநாராயணசுவாமி, தலைமையில் நடைபெற்ற விழாவில், தாளாளர் சுகுணா, அறங்காவலர்கள் அனிஷ்குமார், சாந்தினி அனிஷ்குமார் மற்றும் இயக்குநர் ஆண்டனிராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் கொங்கு மண்டல பட்டிமன்றப் பேச்சாளர் சாந்தாமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்..
நிகழ்ச்சியில், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களின் சிறப்பையும், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் எடுத்துரைக்கும் வகையில், பஞ்சபூதங்கள்’என்ற கருப்பொருளில் மாணவ, மாணவிகளின் சிறப்பு நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இயற்கையின் முக்கியத்துவத்தையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வையும் வெளிப்படுத்திய இந்நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.
இசையும் நடனமும் இணைந்த நிகழ்ச்சிகளில் மாணவர்கள் தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றனர்.விழாவின் ஒரு பகுதியாக 2026–2027 ஆம் கல்வியாண்டிற்கான ‘பள்ளியின் நட்சத்திரம்’ விருது, ஏழாம் வகுப்பு மாணவி தியாவுக்கு வழங்கப்பட்டது.விழாவில் பள்ளி முதல்வர் பத்மாவதி பஞ்சாபகேசன், துணை முதல்வர் மஞ்சுளா குமாரி மற்றும் மாணவ,மாணவிகள்,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்…
மாணவர்களின் கல்வி மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற ஆண்டு விழா, கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நிறைவடைந்தது.
.