கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புலியூர் கிராமத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 55-வது ஆண்டு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.


இந்த விழாவிற்கு காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியச் செயலாளர் டி. இரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் கே பி எம்.சதீஷ் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர் அசோக்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


விழாவில் அதிமுகவின் வளர்ச்சி, கட்சியின் கொள்கைகள் மற்றும் மக்கள் நலப் பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், கட்சியின் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, பொதுமக்களின் நலனுக்காகத் தொடர்ந்து பாடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு, அதிமுகவின் 55-வது ஆண்டு விழா மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.


இந்த விழாவில் ஒன்றிய அவைத் தலைவர் கணேசன், ஒன்றிய துணை செயலாளர்கள் சுரேந்திரன், சித்ரா முருகேசன், ஒன்றிய பொருளாளர் ராமன், மாவட்ட பிரதிநிதிகள் குமார், ஜோதிமணி, தருமன், முருகையன், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் பழனி, இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் பெரியசாமி, விவசாய அணி ஒன்றிய செயலாளர் முருகேசன், மீனவர் அணி ஒன்றிய செயலாளர் கண்ணப்பன், எம்ஜிஆர் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் சங்கர், அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜப்பன், சிறுபான்மையினர் அணி பிரிவு செயலாளர் மாலிக் பாஷா, மாவட்ட சிறுபான்மை அணி சிராஜ், தகவல் தொழில்நுட்பை பிரிவு ஒன்றிய செயலாளர் கலைவாணன், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் வீரப்பன், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் கோவிந்தராஜன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் தமிழரசு, மாணவர் அணி துணை செயலாளர் உதயகுமார், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் சுப்ரமணி, மாவட்ட விவசாய பிரிவு துணைச் செயலாளர், முனியப்பன் மோகன், கணேசன், மாவட்ட மீனவர் அணி துணை செயலாளர் எம்சி.கணேசன், மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் பாவேந்தன், மாவட்ட துணை செயலாளர் மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளர் ரஞ்சித், மாவட்ட வர்த்தக பிரிவு துணை செயலாளர் குமரிநாதன், மாவட்ட கலை பிரிவு துணைச் செயலாளர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமலிங்கம், முன்னாள் கவுன்சிலர் ரேணுகா, சரவணன்,ஐயாசாமி, செல்வம், புருஷோத், மாரிமுத்து, முபாரக், ஜெகதீசன், பன்னீர், தவமணி உள்ளிட்ட அனைத்து சார்பணி நிர்வாகிகளும் ஊராட்சி மன்ற தலைவர்களும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என 300 மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *