துறையூரில் எம்ஜிஆர் நற்பணி மன்ற அமைப்பாளர் என். சங்கர் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
துறையூர் அக்-17
திருச்சி மாவட்டம் துறையூரில் எம்ஜிஆர் நற்பணி மன்றம் சார்பில் அஇஅதிமுக 55 வது ஆண்டு துவக்க தின விழா (அக்-17) கொண்டாடப்பட்டது. இதனைத்தொடர்ந்து சிலோன் ஆபிஸில் பகுதியில் உள்ள புரட்சி தலைவர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு எம்ஜிஆர் நற்பணி மன்ற அமைப்பாளர்,அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் துறையூர் என். சங்கர் தலைமையில் மலர் மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் வார்டு செயலாளர்கள் இளங்கோவன், ராஜேந்திரன், வடிவேல்,சங்கிலி, சந்தானம்,கருப்பையா , பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக மருத்துவ அணி மாவட்ட செயலாளர் டாக்டர் அரவிந்த், முன்னாள் நகர செயலாளர், எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணை செயலாளர் கவிதை மணி, வழக்கறிஞர் கார்த்திகேயன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் இளங்கோவன், மாவட்ட பிரதிநிதி மருத முத்து,மாவட்ட இளைஞரணி செயலாளர் குருசாமி,நகர பொருளாளர் வழக்கறிஞர் கருணாகரன் மற்றும் நகர இளைஞர் அணி செயலாளர் விவேக், மகளிரணி நகர செயலாளர் வளர்மதி, நிர்வாகிகள்எஸ்கே சாமி, பேச்சாளர் கருப்பண்ணன்,மார்க்கெட் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்