காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இயங்கி வரும் பிரபல கார் தயாரிப்பு தொழிற்சாலையான ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஆலையில் ஆயுத பூஜை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பாரம்பரியத்தையும் ஒற்றுமையையும் ஒருங்கிணைக்கும் வகையில், வண்ணமயமான அலங்காரங்கள் மற்றும் படைப்பாற்றல் மிக்க காட்சிகளால் ஆலை விழாக்கோலம் பூண்டது. தங்களது பணிக்குப் பயன்படும் கருவிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஊழியர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இக்கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு. தருண் கர்க், முழுநேர இயக்குநர் மற்றும் தலைமை உற்பத்தி அதிகாரி திரு. முகுந்தன் எம்.எஸ். மற்றும் பிற மூத்த நிர்வாகிகளின் பங்கேற்றனர்