ஈரோடு மாநகராட்சி மண்டலம் ஒன்னு வார்டு 26 பச்சையம்மன் கோவில் வீதியில் பாழடைந்த கட்டிடம் இடிந்து விழுந்ததை மாவட்ட ஆட்சித்தலைவர்ச. கந்தசாமி பார்வையிட்டார்.
(17. 10 .2026) நண்பகல் சுமார் 1:30 மணி அளவில் ஈரோடு மாநகராட்சி மண்டலம் 1, வார்டு 26, பச்சியம்மன் வீதியில் உள்ள 50 ஆண்டுக்கு மேல் பழமையான தரைத்தளம் மற்றும் இரண்டு மாடியில் கொண்ட பாழடைந்த வீடு இடிந்து விழுந்தது. இந்த வீட்டில் யாரும் குடியிருந்து வரவில்லை என்பதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் கட்டிடம் இடிந்து விழுந்த போது அருகில் இருந்த ஆர் சி சி கட்டுமானத்தில் ஆன சிறிய அளவிலான (மெஸ்) உணவகம் மீது விழுந்தது. இடிந்த விழுந்த வீடு மற்றும் உணவகம் ஆகிய இரண்டிற்கும் உரிமையாளர் திருமதி சுகுணா என்பவர் ஆவார். சந்தோஷ் என்பவர் வாடகை எடுத்து நமச்சிவாயா என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார் இந்த உணவகம் காலை மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே செயல்படுவதால் சம்பவ நேரத்தில் அங்கு யாரும் இல்லை இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இடிந்து விழுந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மின் கம்பி வயர்கள் அறுந்து போன நிலையில் இருந்ததை உடனடியாக சம்பந்தப்பட்டு மின்வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டு மின்வாரிய பணியாளர்கள் மூலம் மின் இணைப்பை துண்டித்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் வாகனங்கள் சாலையில் செல்லுவதற்கு ஏதுவாக சாலையில் விழுந்த இடிபாடுகள் உடனடியாக அகற்றப்பட்டு வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வின் போது ஈரோடு மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சோமசுந்தரம், உதவி பொறியாளர் கண்ணன், சுவரன்சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.