வானூர்: விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலயத்தில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டி சிறப்பு பூஜைகள் செய்து பயணத்தைத் தொடங்கினர்.

ஐப்பசி மாதத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்படுவதையொட்டி, ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பெரம்பை கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலயத்தில் ஒன்றுகூடி, இருமுடி கட்டி, நெய் தேங்காய் மற்றும் அரிசி உள்ளிட்ட பூஜைப் பொருட்களை எடுத்துக்கொண்டு ஐயப்பனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.

தொடர்ந்து, குடும்பத்தினருடன் சபரிமலைக்குப் புறப்பட்டுச் சென்றனர். சபரிமலை ஐயப்பனைத் தரிசித்து அவரது அருளைப் பெறும் நோக்கில் பக்தர்கள் பக்தியுடனும் உற்சாகத்துடனும் பயணத்தைத் தொடங்கினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *