விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், எறையூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, அம்மன் லட்சுமி அவதாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனைத் தொடர்ந்து அம்மனுக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில் எறையூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு கலந்து கொண்டு பக்தியுடன் அம்மனை வழிபட்டனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அம்மனின் அருளைப் பெற்றுச் சென்றனர்.