அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர் களின் பிரச்சனை களைத் தீர்க்க வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர்கள் நல அமைப்பு , மதுரை மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர்கள் நல அமைப்பு மதுரை ஆகியவற்றின் சார்பில், மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
2026 ஏப்ரல் மாதம் முதல் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வுகாலப் பணப்பலன்களை உடனடி யாக வழங்க வேண்டும்.2003- ம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர் களுக்கு, ஊதிய ஒப்பந்த அடிப் படையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.ஊதிய ஒப்பந்த நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு, அவர்கள் ஓய்வுபெறும் நாளன்றே அனைத்து ஓய்வுகாலப் பணப்பலன்களையும் வழங்க வேண்டும்.
இறந்த தொழிலாளர்களின் வாரிசு தாரர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்துக்குஅரசு போக்கு வரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர்கள் நல அமைப்பு தலைவர் அழகர் தலைமை தாங்கினார். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர்கள் நல அமைப்பு செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற ஊழியர்கள் நல அமைப்பு மாநிலச் சம்மேளனத் தலைவர் பிச்சை துவக்கி வைத்து பேசினார் .
தொழிற்சங்கங்களின் சார்பில், மதுரை மாவட்ட சிஐடியு செயலாளர் லெனின், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியு பொதுச்செயலாளர் அழகர்சாமி, அனைத்துத்துறை ஓய்வூதியர் கூட்டமைப்பின் மதுரை மாவட்டச் செயலாளர் பால்முருகன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக சிஐடியு கிளைத் தலைவர் செல்லத்துரை ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மதுரை அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியர் கள் நல அமைப்பு பொதுச் செயலாளர் வாசுதேவன் விளக்கவுரை கூறினார். மதுரை மாவட்ட சிஐடியு உதவித் தலைவர் ராஜேந்திரன் நிறைவுரை கூறினார். மதுரை அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர்கள் நல அமைப்பு பொருளாளர் ரவி நன்றி கூறினார்.
ஓய்வூதியர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.