150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்குப் பதக்கங்கள் வழங்கப்பட்டன

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், குரவப்புலம் பாயிண்ட் காலிமர் பன்னாட்டுப் பள்ளியில், நாகப்பட்டினம் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பில் 2026-ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று நடைபெற்றன.

இப்போட்டியில் 4 வயது முதல் 15 வயது வரையிலான நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருப்பூண்டி, ஆயக்காரன்புலம், வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ரோலர் ஸ்கேட்டிங் மற்றும் ரோடு ஷோ உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

போட்டியைப் பள்ளியின் இயக்குநர் சாகுல் ஹமீது கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மாநில அளவிலான நடுவராகப் பணியாற்றி வரும் எம். ஆனந்த், போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களின் திறமைகளை மதிப்பீடு செய்து, முதல் மூன்று இடங்களைப் பிடித்த வெற்றியாளர்களைத் தேர்வு செய்தார்.

போட்டிகளில் வெற்றி பெற்ற 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்குப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், இப்போட்டியில் சிறப்பிடம் பெற்ற மூன்று மாணவர்கள் மாநில அளவில் நடைபெறவுள்ள ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் பாதுகாப்பிற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்குப் பள்ளியின் முதல்வர் சிராஜு நிஷா பேகம் பதக்கங்கள் மற்றும் கேடயங்களை வழங்கிப் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட ஸ்கேட்டிங் சங்கச் செயலாளர் பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டிகளைச் சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *