தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைமைச் செயற்குழுக் கூட்டம், மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமையில் கோவையில் நடைபெற்றது.கூட்டத்தில் பேசிய மாநிலப் பொதுச்செயலாளர் பேராசிரியர் டாக்டர் ஜெ. ஹாஜாகனி, “தமுமுக 33 ஆண்டுகளுக்கும் மேலாக தியாகப் பாதையில் பயணித்து வருகிறது. பேரிடர், பெருமழை, கொரோனா ஊரடங்கு காலங்களில் ஆற்றிய சேவைகள் தமிழகத்தைத் தாண்டி இலங்கை உள்ளிட்ட பகுதிகளிலும் விரிவடைந்துள்ளன.
நெருப்பில்லாமல் சமைக்க முடியாது அதே நேரம் நெருப்பு நம் வீட்டுக் கூரையில் எறிந்தால் ரசிக்க முடியாது அதேபோல சமூக ஊடகம் இல்லாமல் வாழ முடியாது அந்த சமூக ஊடகமே சமூகத்தில் குழப்பம் ஏற்படுத்துவதையும் அனுமதிக்க முடியாது
என்றார்.