துறையூர் அக்-18
திருச்சி மாவட்டம் துறையூரில் முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா அருகில் அதிமுக தெற்கு ஒன்றியம் சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் என்.யோகநாதன் தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 55 வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெற்றது.

இதில் முன்னாள் அண்ணா தொழிற்சங்க தலைவரும், தெற்கு ஒன்றிய செயலாளருமான என்.தன்ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார்.இக்கூட்டத்தில் தில் பேசிய மாவட்ட செயலாளர் லோகநாதன், எம்ஜிஆர் அஇஅதிமுக தொடங்கிய காலத்திலிருந்து ஜெயலலிதா , எடப்பாடியார் ஆகியோர் தமிழ்நாடு மக்களுக்கு செய்த சேவைகள் சாதனைகள், திட்டங்கள் பற்றி எடுத்துரைத்து மீண்டும் தமிழகத்தில் எடப்பாடியாரின் ஆட்சி அமைய அனைவரும் ஒற்றுமையாக உழைப்போம் என்று பேசினார்.

இதனைதொடர்ந்து முன்னாள் அமைச்சர் வெ.சரோஜா,தலைமை கழக பேச்சாளர்கள் தீக்கனல் லட்சுமணன், கோபிகா நாகராஜன் ஆகியோர் அதிமுக வின் சாதனைகளை‌ பட்டியலிட்டு புரட்சி தலைவி அம்மா, எடப்பாடியார் கொண்டு வந்த திட்டங்களை இன்றைய ஆட்சியாளர்கள் வரை பயன்படுத்தி வருகிறார்கள் என்று பேசினார்கள்.இதில் முன்னாள் எம்எல்ஏ த.இந்திரா காந்தி, முன்னாள் அமைச்சர் ஆர் சரோஜா, மாவட்ட செயலாளர்கள் அறிவழகன் விஜய், அன்புபிரபாகரன்,நகர செயலாளர் அமைதிபாலு, நகர அவைத்தலைவர் ரவிவர்மா, ஒன்றிய செயலாளர்கள் பொன்.காமராஜ், ராம்மோகன்,முன்னாள் தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன்,பேரூர் கழக செயலாளர்கள் ராஜேந்திரன், ராஜாங்கம், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் தீனதயாளன்,மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் எஸ்ஆர் விஜயரங்கன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் சிவ.பொன்னன், அண்ணா தொழிற்சங்கம் இளங்கோவன்,மைவிழி அன்பரசன், வழக்கறிஞர்கள் ஏஎஸ் மனோகர், செந்தில்குமார், தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் அவைத்தலைவர் ரவிச்சந்திரன், துணை செயலாளர் சரவணன், இணைச் செயலாளர் இந்துமதி, துணை செயலாளர் லலிதா கண்ணன், பொருளாளர் ராம்குமார், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், திவ்யா, பாலசுப்பிரமணியன், ரமேஷ், மாவட்ட நிர்வாகிகள் என் சிவசாந்த் மனோகரன், எஸ்கேபி ஸ்ரீதர், சின்னசாமி, ஆதனூர் செல்வராஜ்,நகர இளைஞர் அணி விவேக், எஸ்.கே.சாமி பேச்சாளர் கருப்பண்ணன், சரவணன் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள், ஐடி விங் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.என் நாகராஜன், பி செல்வராஜ், எம்பி நாகராஜன் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர்.

வெ நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *