நெல்லிக்குப்பத்தில் POWERGRID Corporation of India Limited சார்பில் விழிப்புணர்வு வார விழா – 2026 சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் POWERGRID நிறுவனத்தின் சார்பில் லட்சுமி, Sr. DGM ஆகியோர் தலைமை தாங்கினர்.

நிகழ்ச்சியின் முகவுரை மற்றும் நிறைவுரையை POWERGRID நிறுவனத்தின் பொறியாளர் ச. வீரப்பன் வழங்கினார். மேலும், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் அவர் சிறப்பாகச் செய்திருந்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட ஆறுமுகம் மற்றும் வடிவேல் ஆகியோர் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் தடுப்பின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினர். இதில் நிறுவன நிர்வாகிகள் மற்றும் கிராமப் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நேர்மையான நிர்வாகத்தை ஊக்குவித்தல், ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துதல் மற்றும் பொறுப்புணர்வு மிக்க சமூகத்தை உருவாக்குதல் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது. நாட்டின் முன்னேற்றத்திற்கும் நல்லாட்சிக்கும் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் அவசியம் என்பதை நிகழ்ச்சியில் எடுத்துரைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *