விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் ஆறாம் நாள் நவராத்திரி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு அம்மன் பாடல்களைப் பாடி பக்தியுடன் வழிபட்டனர். அம்மனுக்குப் பூக்களால் அலங்காரம் செய்து, குங்குமம் மற்றும் மஞ்சள் கலந்த நீரால் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், நவராத்திரி கொலுவில் பல்வேறு சுவாமி சிலைகளை பக்தர்கள் வாங்கி வைத்து வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அம்மனுக்குச் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர், கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்று அம்மனின் அருளைப் பெற்றனர்.