விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலயத்தில் ஆறாம் நாள் நவராத்திரி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் விஷ்ணு துர்க்கை அம்மன், மகாலட்சுமி அவதாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். அம்மனுக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.இதில் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு அம்மனைப் பக்தியுடன் வழிபட்டு, அம்மனின் அருளைப் பெற்றுச் சென்றனர்.