பேராவூரணி அக்.18
தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்திற்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கான, புதிய பாடத்திட்டத்திற்கான இரண்டாம் பருவத்திற்குரிய புத்தாக்கப் பயிற்சி, பேராவூரணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இப்பயிற்சியை வட்டாரக் கல்வி அலுவலர் கலாராணி தொடங்கி வைத்து, பயிற்சி குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கமளித்தார். பயிற்சிக்கு வருகை தந்த அனைவரையும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் கோகுலகிருஷ்ணன் வரவேற்றார்.
இப்பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியில், வகுப்பறையில் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித அடிப்படைத் திறன்களை வளர்ப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சிக்கு இளையராஜா, பெஞ்சமின், மகேஸ்வரன், பிரகாஷ் ஆகிய ஆசிரியர்கள் கருத்தாளர்களாகச் செயல்பட்டனர். நிறைவாக, வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் சாஷிதாபானு நன்றி கூறினார். பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் செய்திருந்தனர்.
பேராவூரணி நீலகண்டன் .