தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பைபாஸ் பகுதியில் நின்றிருந்தவரிடம் அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து ஆயுதங்களை காட்டி மிரட்டி இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்றுள்ளனர்.
இது சம்மந்தமாக ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த சுதர்சன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தஞ்சாவூர் தாலுக்கா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம் உத்தரவின்படி குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் இரவு ரோந்து பணியில் அதிக காவலர்கள் நியமிக்கப்பட்டது.
தமிழ்பல்கலைக்கழக காவல் நிலைய காவல் ஆய்வாளர் முருகானந்தம் இரவு ரோந்தின் போது தமிழ் பல்கலைக்கழக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்லியம்மன் கோவில் அருகே உள்ள சுடுகாட்டில் இருந்த சந்தேகத்திற்குட்பட்ட நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் மேற்படி நபர்கள் திருவாருர் மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான லோகநாதன், அஜய், திவாகர்மற்றும் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த தர்ஷன் ஆகியோரை விசாரித்ததில் கடந்த 9-ம் தேதி தஞ்சாவூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இரு சக்கர வாகன வழிப்பறியில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது. ஆகவே மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதேபோல் கடந்த 16.10.2026 அன்று இரவு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர்கள் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் கேஸ் சிலிண்டர்களைக் கொண்டு வந்த இரு நபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தஞ்சாவூர் பாத்திமா நகர் பூக்கார மாதா கோவில் தெருவை சேர்ந்த அந்தோனிபவியன் மற்றும் பாரதி தெருவை சேர்ந்த கார்த்திக் ஆகியோரிடம் விசாரணை செய்ததில் இருவரும் தஞ்சாவூர், தெற்கு பூக்கொல்லை, வள்ளலார் நகர் பகுதியில் வசிக்கும் புகழேந்திரன் என்பவரது வீட்டுத் திண்ணையில் வைக்கப்பட்டிருந்த காலி கேஸ் சிலிண்டர்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மேற்கண்ட இருவரும் தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கேஸ் சிலிண்டர்களைத் திருடி, அவற்றை பாபநாசம்,இரும்புத்தலையைச்சேர்ந்த தமிழ்செல்வன், பாபநாசம், சோழன் தெருவைச்சேர்ந்த சூர்யா, தஞ்சாவூர் விளாரைச்சேர்ந்த செல்வராஜ் மற்றும் வல்லம் புதூரைச் சேர்ந்த முருகானந்தம் ஆகிய நான்கு நபர்களிடம் வழங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சிலிண்டர்களைத் திருடிய அந்தோணி பவியான், கார்த்திக் மற்றும் திருடப்பட்ட சிலிண்டர்களைப் பெற்றுக்கொண்ட தமிழ்ச்செல்வன், சூர்யா, செல்வராஜ், முருகானந்தம் ஆகிய ஆறு நபர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மொத்தம் 17 காலி கேஸ் சிலிண்டர்கள் மற்றும் குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட ஆறு நபர்களும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவ்வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த தமிழப்பல்கலைக்கழக காவல் ஆய்வாளர் முருகானந்தம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல் ஆய்வாளர் ஜெயந்தி, உதவி காவல் ஆய்வாளர் முத்துகுமார் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம் வெகுவாக பாராட்டினார்கள்.