தஞ்சாவூர், அக்- 19. தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் துணிப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் நிறுவப்பட்டது,தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில், இக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்ற வேண்டி சுவாமியை தரிசனம் செய்ய வருகின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களை ஆங்காங்கு வீசி செல்வதை தடுக்கும் வகையில் ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் திவாஸ் கிளப் சார்பில் கோவிலில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க தானியங்கி துணிப்பை வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டது,

இந்த தானியங்கி துணிப்பை வழங்கும் இயந்திரத்தின் அருகில் உள்ள குப்பை தொட்டியில் வேற்று பிளாஸ்டிக் (தண்ணீரில்லா) பாட்டில்களை போட்டால். இந்த தானியங்கி இயந்திரம் ஒரு துணிப்பையை வழங்கும் படி வடிவமைத்துள்ளார்கள், இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 250 துணிப்பைகள் வழங்கும்.

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜெயக்குமார், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்ட ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் போது மக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *