தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக அணியில் பங்கேற்ற எஸ்.வி. ஜி.வி பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டி நடைபெற்றது. இதில் மாநில அளவிலான சப் ஜூனியர் அணியில் தமிழக அணிக்கு விளையாடுவதற்காக 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த அணியில் காரமடை எஸ்.வி. ஜி.வி பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி தக்ஷிதா தமிழ்நாடு அணிக்காக விளையாடினார். போட்டியில்
தமிழக பெண்கள் அணி தங்கப் பதக்கம் வென்றது.
இதையடுத்து தமிழ்நாடு அணிக்காக விளையாடி பெருமை சேர்த்த எஸ்.வி.ஜி.வி பள்ளி மாணவி தக்ஷிதா மற்றும் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் நடைபெற்ற போட்டியில் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் ஈட்டி எரிதலில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவில் நடை பெற்ற போட்டியில் மூன்றாம் இடம் பெற்ற மாணவன் சுதீஷன் ஆகியோருக் பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் டாக்டர் பழனிச்சாமி, நிர்வாக அறங்காவலர் லோகு முருகன், முதல்வர் சசிகலா, செயலாளர் ராஜேந்திரன், அறங்காவலர் தாரகேஸ்வரி, நிர்வாக அதிகாரி சிவ சதீஷ்குமார், பொருளாளர் ரத்தினசாமி அறங்காவலர்கள் ராஜேந்திரன், வேலுச்சாமி மற்றும் பயிற்சியாளர்கள் மாரியப்பன், கிரி, பாபு,அஜித், உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரசேகர், ரம்யா காயத்ரி, ஆசிரிய ஆசிரியர்கள், பாராட்டி வாழ்த்தினார்.