கல்பாக்கம் அக் 20
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் கிராமத்தில் புதுப்பட்டினம் இசிஆர் டீசல் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் 2 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா சங்க தலைவர் யூனுஸ் தலைமையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

இதில் சங்க துணைத் தலைவர் ஏழுமலை செயலாளர் தமீன் பொருளாளர் கோவிந்தசாமி அணு சக்தி துறை சிஐடியு தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவர் பழனிசாமி மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

சிறப்பு அழைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ம தனபால் புதுப்பட்டினம் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி தனபால் ஆகியோர் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தனர் இதில் எம் பி ஆர் பேப்ரிகேசன் உரிமையாளரும் சமூக சேவகருமான பஷீர் சிறப்பு செய்யப்பட்டார் விழாவில் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *