தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதி முழுவதும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், 2000 -க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் திட்டத்தின் முதற்கட்டப் பணிகளை, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா எம் எல் ஏ தொடங்கி வைத்தார்
கம்பம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைந்துள்ள ரவுண்டானா பகுதியில் குத்துவிளக்கு ஏற்றி முதல் கட்டமாக கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியை தொடங்கி வைத்தார் பின்னர் இதுகுறித்து ஜெகநாத் மிஸ்ரா கூறியது
கம்பம் சட்டமன்றத் தொகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தேன். அதன்படி, முதற்கட்டமாக ரூபாய்.25 லட்சம் மதிப்பீட்டில் என்னுடைய சொந்த நிதியில் இப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம் கம்பம், சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உத்தமபாளையம், சின்னமனூர், ஓடைப்பட்டி, தேவாரம் ஆகிய ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 2000-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த வணிக நிறுவனங்கள் தன்னார்வ அமைப்பினர் தொண்டு நிறுவனங்கள் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் தங்கள் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்க நிதி உதவி அளித்து தங்கள் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் கேமராக்கள் பொருத்தப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட பகுதிகளின் காவல் நிலையங்களில் கண்காணிப்பு மானிட்டர்கள் மூலம் காட்சிகளைக் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படும்.
இதன் மூலம் திருட்டு, வழிப்பறி, சமூக விரோத செயல்கள் குறைக்கப்பட்டு மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார் நிகழ்ச்சியில், தேனி தென்மேற்கு மாவட்டக் கழக இணைச் செயலாளர் கூடல் செல்வேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அய்யர் மற்றும் நகர, ஒன்றியக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.