தஞ்சாவூர், ஆக- 20. தஞ்சையில் கடந்த 9 ஆண்டுகளாக நம்பிக்கையுடன் தொடர்ந்து மருத்துவச் சேவையாற்றி வரும் டாக்டர் சங்கர்ஸ் ஆர்த்தோ & மல்டிஸ்பெஷாலிட்டி சென்டர், தற்போது ராஜப்பா நகரில் அதிநவீன வசதிகளுடன் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையைத் தொடங்கியுள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதிய மருத்துவமனையை டாக்டர் சங்கர்ராமின் தந்தை திரு. ஆர். ரங்கநாதன் திறந்து வைத்தார்.இந்த விழாவில் ஞானம் ஹோட்டல் திரு. செல்வராஜ், டாக்டர் ரவி மற்றும் டாக்டர் சங்கர்ராமின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். மேலும், பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள், முக்கியப் பிரமுகர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், ரோட்டரி மற்றும் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
கடந்த 9 ஆண்டுகளாக மருத்துவச் சேவையில் ஈடுபட்டு வரும் இம்மருத்துவமனை, புதிய கட்டடத்தில் அதிநவீன வசதிகளுடன் தனது மருத்துவச் சேவையைத் தொடர்ந்து வழங்க உள்ளது.