தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரி இலக்கிய மன்ற விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவரும் திரைப்பட எழுத்தாளருமான பாஸ்கர் சக்தி பேசும்போது தினமும் அதிகாலையில் எழுந்தவுடன் தினசரி செய்தித்தாள்கள் வாசிப்பது கல்லூரி மாணவர்கள் உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்றும் பேசினார்
அவர் மேலும் பேசியது திரைப்படங்களில் இருந்து மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நன்மைகள் குறித்தும் காலையில் எழுந்தவுடன் தினசரி செய்தித்தாள்கள் வாசிப்பது மாணவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் கைபேசி பயன்படுத்துவதால் வாழ்க்கையின் பயணம் எவ்வாறு தடுமாறுவது பற்றியும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசும்போது தங்களைப் பெற்றதாய் தந்தையர்கள் சேர்த்து வைக்கும் சொத்து என்பது நிரந்தரம் அல்ல ஆனால் நீங்கள் படிக்கும் கல்வி தான் உங்களின் நிரந்தரச் சொத்து என்பதை அறிந்து மாணவ மாணவிகள் நன்கு படித்து தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள இந்த கல்வியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்
மேலும் இந்த நிகழ்ச்சியில் கல்லூரி தமிழ் துறை சார்பாக ஆய்வு நூல் வெளியிடப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியில் தலைவர் சு. இராமநாதன் கல்லூரியில் உப தலைவர் சொ.வே.சு. ஞானவேல் ஆகியோர் தலைமை வகித்தனர்.
கல்லூரியின் செயலாளர் மற்றும் தொடர்பாளர் ஆர் புருசோத்தமன் கல்லூரியின் முதல்வர் எஸ் சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் கல்லூரி இலக்கிய மன்ற தலைவர் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது எல்லோரையும் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் வே. மீனா நன்றி கூறினார்
இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை கல்லூரி கண்காணிப்பாளர் யுவராஜா தலைமையில் கல்லூரியின் தமிழ் மன்றம் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கல்லூரிகள் தமிழ்த் துறை பேராசிரியர்கள் மா.சே. ராதா பிரவீன் குமார் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்