தென்காசி: தென்காசி மாவட்டத்தில் தென்காசி வாய்க்கால் பாலம் முதல் குத்துக்கல்வலசை வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு, வருவாய்த்துறை வரைபட ஆவணங்களின் அடிப்படையில் சாலையை விரிவாக்கம் செய்யக் கோரி, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்த சாலை விரிவாக்கக் கோரிக்கையை வலியுறுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த 900 பொதுமக்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டு, அவற்றுடன் கூடிய கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க கட்சி நிர்வாகிகள் வந்தனர்.

அப்போது, மனுவை வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் ஆகியவற்றுடன் தாம்பூலத் தட்டில் வைத்து வழங்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் ஆகியவற்றைத் தவிர்த்து மனுவை மட்டும் வழங்குமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் தாம்பூலப் பொருட்கள் இன்றி கோரிக்கை மனுவை மட்டும் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

தென்காசி வாய்க்கால் பாலம் முதல் குத்துக்கல்வலசை வரையிலான சுமார் 3 கிலோமீட்டர் சாலையை வருவாய்த்துறை வரைபட ஆவணங்களின் அடிப்படையில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த மனுவின் முக்கிய கோரிக்கையாகும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *