சத்தியமங்கலம், ரங்கசமுத்திரம்:
சத்தியமங்கலம் அருகே ரங்கசமுத்திரத்தில் உள்ள பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வி தலைமையில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர். செல்வம், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் சத்யா சிவராஜ், சரவணன், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி பவுல்ராஜ், சோழசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.