தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

திருப்பூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு.

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் – தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக 12 பேர் கைது

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த நிலையில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகப் பல்வேறு புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக தாராபுரம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

கடந்த 02.10.26 ஆம் தேதி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது, தாராபுரம் to உடுமலைப்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் அனுமதியின்றி நாம் தமிழர் கட்சியின் ஃப்ளெக்ஸ் பேனரை வைத்துள்ளனர். அதனை அகற்ற முயன்ற காவல்துறையினரைத் தடுத்து, காவல்துறையினர் பலமுறை எச்சரித்தும் தகாத வார்த்தைகளைப் பேசிய சஞ்சய் காந்தி மற்றும் ஷேக் பரீத் ஆகியோர் மீது தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதே நாளில் 02.10.26 ஆம் தேதி, நாம் தமிழர் கட்சியின் சார்பில், அனுமதியின்றிப் பொது இடத்தில் பேனர் வைத்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து, அக்கட்சியின் தாராபுரம் தொகுதி வேட்பாளர் திருமதி.கார்த்திகா, கட்சி நிர்வாகிகள் மற்றும் பிற கட்சியினர் முன் அனுமதியின்றி தாராபுரம் காவல் நிலையம் முன்பு ஒன்றுகூடினர். அப்போது, பொதுமக்களுக்கும் வாகனப் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியதுடன், தகாத வார்த்தைகளைப் பேசி, காவல்துறையினர் தங்களது பணியைச் செய்யவிடாமல் தடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திருமதி.கார்த்திகா மற்றும் 8 நபர்கள் மீது தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடந்த 04.10.26 ஆம் தேதி, தேர்தல் பிரசாரத்திற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தாராபுரத்திற்கு வருகை தந்தபோது, அவர் சாலைவலம் சென்ற வழியில் அனுமதியின்றி திடீரெனக் கூடி இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டதாகக் கூறப்படும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திருமதி.கார்த்திகா மற்றும் 57 நபர்கள் மீது தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடந்த 04.10.26 ஆம் தேதி, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சாலை வலத்தின்போது, சாலை மறியலில் ஈடுபட்டு, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினரைத் தகாத வார்த்தைகளால் பேசியும், மிரட்டியும், அவர்கள் தங்கள் பணியைச் செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறப்படும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திருமதி.கார்த்திகா மற்றும் 12 நபர்கள் மீது தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடந்த 04.10.26 ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சித் துண்டைத் தலையில் அணிந்திருந்த நபர் ஒருவரையும், அவரது மனைவியையும் தாக்கியதாகக் கூறப்படும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திருமதி.கார்த்திகாவின் ஆதரவாளர்கள் மூவர் மற்றும் திருமதி.கார்த்திகா ஆகியோர் மீது தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேற்கண்ட வழக்குகளில் தொடர்புடையவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள 12 நபர்களை காவல்துறையினர் 20.10.2026-ஆம் தேதி கைது செய்து, இதுவரை 1.கார்த்திகா(36) 2.முருக சந்திரகுமார் 3.சஞ்சய் காந்தி 4.இசைமதிவாணன்(40) 5.விக்னேஷ்பாண்டியன்(25) 6.ஷேக் பரீத்(36) 7.கோவிந்தராஜ்(47) 8.சூர்யா(21) 9.கந்தசாமி(42) ஆகியோரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *