திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே தொடங்கிய இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மணிக்கூண்டு அருகே நிறைவடைந்தது. தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய சிறுபான்மைப் பிரிவு செயலாளர் இப்ராஹிம், திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம், மாவட்டச் செயலாளர் கார்த்திகைசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பேரணியின்போது போதைப் பொருட்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போதைப் பொருட்களை ஒழித்து, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.