தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.

தஞ்சாவூர் வல்லம் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தில் அருள் பாலிக்கும், அனந்த குபேர சாய்பாபா கோவிலில் பாபாவின் 108-வது சமாதி நாள் கொண்டாடப்பட்டது.

திருவையாறு வட கைலாய சிவனடியார் திரு கூட்டத்தின் சார்பில் திருவாசக முற்றோறுதல் நிகழ்வில் சிவனடியார்கள் திருவாசகம் பாடி அதற்கு விளக்கம் அளித்தனர் அனந்த குபேர சாய்பாபா தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அனைவரும் மன மகிழ்வுடன் கேட்டனர்.

பின்னர் மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையில் பக்தர்களின் மனதில் உள்ள தீராத பிரச்சனைகள் மற்றும் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி மகா தீப ஆராதனை நிகழ்வில் மனம் உருக வேண்டினார். இந்நிகழ்வு ஏற்பாடு கோவில் நிர்வாக அறங்காவலர் முரளி மற்றும் நிர்வாகிகள் செய்தனர். பொதுமக்கள் மற்றும் ஆதவன் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் சிறப்பாக வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *