தேனி மாவட்டம் கம்பம் தொகுதிக்கு உட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக கிராம ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரில் உரிய அளவில் குளோரினேஷன் செய்து வழங்க வேண்டும் என்று கம்பம் தொகுதி எம்.எல்.ஏ.பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம்
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சில நேரங்களில் சாரல் மழையாகவும் திடீரென கனமழையாகவும் மழை வெளுத்து வாங்கி பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு சுருளி ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழைநீர் மற்றும் வெள்ளப்பெருக்கால் குடிநீர் ஆதாரங்களில் கலங்கலான நீர் கலக்க வாய்ப்புள்ளது. இதனால் சில பகுதிகளில் கலங்கலான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் குடிநீரை முறையாக சுத்திகரித்து, உரிய அளவு குளோரிசன் கலந்து, பாதுகாப்பான குடிநீரை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், முல்லைப் பெரியாறு உள்ளிட்ட ஆற்றுப் பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் ஆறுகளில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகளை வைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெகநாத் மிஸ்ரா கூறியுள்ளார்.