மதுரை மூட்டா அரங்கத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பரங்குன்றம் வட்டாரக்கிளையின் 15-வது அமைப்புத் தேர்தலை ஜோசப் ஜெயசீலன், ரீட்டா ராணி ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக செயல்பட்டு தேர்தலை நடத்தினர். தேர்தலில் வட்டாரத் தலைவராக முருகன், வட்டாரச் செயலாளராக இராமச்சந்திரன், வட்டாரப் பொருளாளராக இளமுருகு குணசீலி, மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்களாக விஜயலட்சுமி, கண்மணி, ஜெய்சன் டேனி மோசஸ், வட்டாரத் துணை தலைவர்களாக ஜெயா, கணேஷ் வரி, அலமேலு, வட்டாரத் துணைச் செயலாளர்
களாக கவிதா, ஆனந்தி, சண்முக சுந்தரி ஆகியோர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை மாவட்ட செயலாளர் சீனிவாசன் வாழ்த்தி பேசினார்.


தமிழ்நாடு முழுவதும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8 வரை பயிலும் மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். காலை உணவு தயாரிக்கும் பணியாளர்களை நிரந்தர பணியிடத்தில் கால முறை ஊதியத்தில் நியமனம் செய்திட வேண்டும். அதே நேரத்தில் காலை உணவுத் திட்டப் பணி களில் ஆசிரியர் களை மேற் பார்வையிட ஈடுபடுத்து
வதால் ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தினந்தோறும் 10 மணி நேரத்திற்கும் மேலாக வேலை பார்க்கக் கூடிய சூழல் (10 மணி நேர வேலை என்பது தொழிலாளர் நலச் சட்டங்களை புறந் தள்ளுவதாக அமையும்) ஏற்படுவதோடு மட்டுமின்றி அந்த மேற்பார்வை பொறுப்பானது கற்பித்தல் பணியை வெகுவாக பாதிக்கும் வகையில் அமைகிறது. எனவே, காலை உணவு மேற்பார்வை பொறுப்பில் ஆசிரியர்களை நியமிப்பதை பரிசீலனை செய்து கல்வித்துறை கைவிட வேண்டும் என்றும் பேசினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *