ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் ஸ்ரீ மகாலட்சுமி மகளிர் கலைக்கல்லூரியில் 32 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நேற்று நடைபெற்றது


இவ்விழாவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் பூபாலன் தலைமை தாங்கினார் ஸ்ரீ மகாலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, KRB இன்டர்நேஷனல் பள்ளியின் தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். KRB இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் சுபாஷினி வரவேற்புரை வழங்கினார்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் முனைவர் தேவி, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு குறித்து உரையாற்றும் போது
குழந்தைகளிடையே அறிவியல் சிந்தனை, ஆய்வு மனப்பான்மை மற்றும் அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் நோக்கில் நடைபெறும் இந்த மாநாட்டில் மாணவர்கள் தங்களது அறிவியல் ஆய்வுத் திட்டங்களைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது


தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு என்பது பள்ளி மாணவர்களிடையே அறிவியல் சிந்தனை, ஆராய்ச்சி மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் நடத்தப்படும் ஒரு சிறப்பான அறிவியல் நிகழ்வாகும் என்று பேசினார் மாநாட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மோகனா தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்

அப்போது அவர் பேசுகையில்…இம்மாநாட்டின் மூலம் மாணவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல், நீர்வளம், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், சுகாதாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆய்வுகளை மேற்கொள்ள வாய்ப்பு பெறுகின்றனர்.


மாணவர்கள் தங்களது பகுதியில் நிலவும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கான அறிவியல் அடிப்படையிலான தீர்வுகளை ஆராய்ந்து, ஆய்வறிக்கையாகத் தயாரித்து சமர்ப்பிக்கலாம் என்றும் இத்தகைய ஆய்வுகள் மாணவர்களின் சுயசிந்தனை, குழுப்பணி, தகவல் சேகரிப்பு மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறனை மேம்படுத்துகின்றன.மேலும்ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்கள் அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டு, தங்களது கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வு முடிவுகளை அறிவியல் மாநாடுகளில் பிற மாணவர்கள் மற்றும் வல்லுநர்கள் முன்னிலையில் எடுத்துரைக்கும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.


மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை உருவாக்கி, எதிர்கால அறிவியல் ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவதில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, மாணவர்கள் இம்மாநாட்டில் ஆர்வத்துடன் பங்கேற்று, அறிவியல் அறிவையும் ஆராய்ச்சித் திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என கூறினார் இறுதியாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர் நன்றியுரை ஆற்றினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *