அரியலூர் லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா வள்ளலார் ராமலிங்க அடிகளார் பிறந்த நாள் விழா முன்னாள் ஜனாதிபதி ஏபிஜெ அப்துல்கலாம் பிறந்த நாள் அரியலூர் மாவட்ட எழுத்தாளர்கள் நல சங்கத்தின் முப்பதாவது செயற்குழு கூட்டம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடந்தது
நிறுவன தலைவர் கவிமுரசு ராஜாராம் தலைமை தாங்கினார் சித்த சக்தி அறக்கட்டளையின் தலைவர் சீனி பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் செயலாளர் பேராசிரியர் கொவி புகழேந்தி ஆசிரியர் அரியலூர் நல்லப்பன் தாழைகவிஞர் க.அங்கமுத்து தமிழ் செம்மல்வைகைமாலா தா. பழூர் கவிஞர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
முன்னதாக இராமலிங்க அடிகளார் மகாத்மாகாந்தி ஏபிஜெ அப்துல் கலாம் ஆகியோரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது பள்ளியின் தலைமை ஆசிரியர் பெ சவுந்தர்ராஜன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் சங்கத்தின் இணைச்செயலாளர் அறச்செல்வி அனைவரையும் வரவேற்று பேசினார்
வள்ளலார் சிறப்புகள் பற்றி கொவி புகழேந்தி பேசினார் தேசப்பிதா மகாத்மா காந்தி இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு ஆற்றிய தொண்டுகள் பணிகள் குறித்து அரியலூர் ஆசிரியர் அ நல்லப்பன் உரை நிகழ்த்தினார்
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ பி ஜெ அப்துல் கலாம் ஆற்றிய பணிகள் அவரது எளிமை மாணவர்களுக்கு அவர் கூறிய அறிவுரைகள் குறித்து கவிஞர் இளஞ்செழியன் சிறப்புரையாற்றினார் அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வள்ளலார் சுவாமிகள் மகாத்மாகாந்தி ஏபிஜெ அப்துல் கலாம் ஆகிய மூன்று பேரை பற்றி சிறப்பு சொற்பொழிவாற்றினார்கள் மாணவிகளுக்கு பரிசு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது சங்க பொருளாளர் செவ்வந்தி அனைவருக்கும் நன்றி கூறினர்