தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா சோத்துப்பாறை அணை மற்றும் இதன் அருகில் உள்ள அகமது ஊராட்சி பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கன மழையாக தொடர்ந்து பெய்து வருவதால் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் வ. சிவ கிருஷ்ணமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது சோத்துப்பாறை அணையில் தண்ணீர் அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளதை யொட்டி அனைத்து பகுதி மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணைக்கு வரும் நீர்வரத்து மற்றும் அனையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன் பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் அணையின் நீர்மட்டம் அணைக்கு வரும் நீர்வரத்து போன்றவைகளை கண்காணித்தும் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் பாசன கண்மாய்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்
இதனைத் தொடர்ந்து சோத்துப்பாறை அணைப்பகுதியில் இருந்து கண்ணக்கரை மற்றும் அகமலை ஊராட்சி பகுதிகள் செல்லும் வரை கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டும் செல்லும் சாலைகளில் திடீர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட்டதுடன் ஒரு சில இடங்களில் ஏற்பட்டுள்ள மண் சரிவுகளை உடனடியாக சீரமைக்கவும் அவ்வப்போது மரங்கள் சாய்வதை கண்டறிந்தால் அவற்றை உடனடியாக அகற்றுவதுடன் பொதுமக்களின் பொது போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படாத வகையில் சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சீரமைத்து மாநில நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் சீரமைப்புப் பணிகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார் இந்த ஆய்வின்போது பெரியகுளம் சார் ஆட்சியர் தவ லேந்து சோத்துப்பாறை அணை உதவி செயற்பொறியாளர் ராஜீவ் பெரியகுளம் தாசில்தார் புவனேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.