ஈரோடு:
ஈரோடு மாநகர், ஈரோடு தெற்கு, ஈரோடு வடக்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு ஆகிய 5 மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் இணைந்து “வாக்கை காப்போம் தேசத்தை காப்போம்” என்ற தலைப்பில் மாபெரும் நிகழ்ச்சியை ஈரோட்டில் நடத்தினார்கள்.

இதன் முதல் நிகழ்வாக, தந்தை பெரியார் தலைமை அரசு மருத்துவமனை எதிரே உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.ராஜேஷ்குமார் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்விற்கும் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கும் ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் பா.ராஜேஷ் ராஜப்பா தலைமை தாங்கினார். ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் கே.பி.முத்துக்குமார், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் பி.உதயகுமரன், நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் டாக்டர் செந்தில், நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதனை தொடர்ந்து காலை 10.45 மணிக்கு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மேலிட பார்வையாளரும் முன்னாள் கர்நாடக அமைச்சருமான கே.ஜெயபிரகாஷ் ஹெக்டே மற்றும் அமைச்சர் எஸ்.ராஜேஷ்குமார் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

மதியம் 12 மணிக்கு “வாக்கை காப்போம் நாட்டை காப்போம்” என்ற தலைப்பில் முன்னாள் கர்நாடக அமைச்சரும் மேலிடப்பார்வையாளருமான கே.ஜெயபிரகாஷ் ஹெக்டே & மாண்புமிகு சுற்றுலா துறை அமைச்சர் எஸ்.ராஜேஷ் குமார் ஆகியோர் வரும் நவம்பர் 1-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாகவும், வாக்குத் திருட்டு மூலம் 13 கோடி வாக்காளர்களை நீக்கி பாசிச பாஜக மோடி அரசை காப்பாற்றி கொண்டிருக்கும் இந்திய தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமாரை பதவி நீக்கி கடும் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என வலியுறுத்தியும் தலைவர்கள் உரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் 5 மாவட்டங்களின் மேலிட பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், துணை அமைப்பு தலைவர்கள், மண்டல, வட்டார, கிராம கமிட்டி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு தலைவர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக, SSA-2 மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய மண்டல, பகுதி, வட்டார தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.ராஜேஷ் குமார் அவர்கள் வெளியிட்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *