மேட்டூர், அக்டோபர் 27,
சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், ரேபிஸ் நோய் பரவுவதைத் தடுக்கவும் மாநகராட்சி ஊழியர்கள் தெருநாய்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, பிடிக்கப்படும் தெருநாய்களுக்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதற்காக அழைத்துச் செல்லப்படுகின்றன.
தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதுடன், பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.பொதுமக்கள் ஒத்துழைப்பு: தெருநாய்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.